Monday, October 26, 2009

கிழங்கில் இருக்கும் மருத்துவ குணம்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு: சத்துக்குரைவான உணவைஉண்பதால் ஏற்படும் சோகை போன்ற நோய்கள் வராமல் தடுக்கும்.ஆனால் அதே சமயம் அதிகமாக உண்டால் சிலருக்கு வாதத் தொல்லைகலை ஏற்ப்படுத்தும்.

கருணைக்கிழங்கு: அஜீரணத்தை அகற்றி நல்ல பசியை உண்டாக்கும்.மற்றும் வாதசூலை,குண்மநோய் கிருமிகள்,வாதம்,பித்தம் போன்றவற்றால் ஏற்படும் நோய்களை போக்கும்.

அமுக்கிரா கிழங்கு: கட்டிகளின் காரணமாக உடலில் ஏற்படும் வீக்கங்களை கரைத்து குண்ப்படுத்தும்.இதை பாலில் நன்கு வேக வைத்து உலர்த்தி பின் இடித்து அத்துடன் கற்கண்டு சேர்த்து பாலில் போட்டு காய்ச்சி குடித்தால் தாதுபுஷ்டி ஏற்படும்.

தாமரை கிழங்கு: இக்கிழங்கு கண்களில் தோன்றும் குறைபாடுகளை போக்கப்பயண்படுகிறது.தவளைச்சொறி,உடல்வலி,பித்தத்தினால் ஏற்படும் மயக்கம் போன்றவற்றையும் குணப்படுத்த வல்லது.

முள்ளங்கி கிழங்கு: இருமல்,ஜலதோஷம்,தலைவலி,கபம்,சுவாசக்கோளாறு,குன்மம்,மூலக்கடுப்பு போன்ற குறைப்பாடுகளையும் குணமாக்கும்.

பனங்கிழங்கு: பித்தமேகம்,அஸ்திசூடு, ஆகியவற்றை நன்கு குண்ப்படுத்தும்.உடல் குளிர்ச்சி உண்டாக்கும்.

சின்னக்கிழங்கு: இருதயநோய்,ஆஸ்துமா, போன்ற பிணிகளுக்கு நல்ல மருந்து.

வெற்றிலைவள்ளிக் கிழங்கு: உடலுக்கு நல்ல ஊட்டச்சத்து தரக்கூடியது.பாண்டுரோகம் குணமாகும்.சிலருக்கு இக்கிழங்கு வாயு தொல்லைகலை உருவாக்கக்கூடும்

0 கருத்துரைகள்:

Search This Blog