கி.பி 1141-ம் ஆண்டு முதலாம் நரசிம்மன் என்ற மன்னன் மைசூரைஆண்டான்.அவன் காவிரியில் அணை கட்டி தமிழ் நாட்டுக்கு தண்ணீர் வராமல் தடுத்தான்.அப்போது சோழ மன்னன் இரண்டாம் ராஜராஜன் மைசூர் மேல் படையெடுத்து போய் அணையை உடைத்து காவிரியை விடுவித்தான்.
அதே போல் 17-ம் நூற்றாண்டில் மைசூரை ஆண்ட சிக்கதேவராயர் என்ற மன்னனும் காவிரித் தண்ணீரை மறித்தான். அப்போது திருச்சியில் இருந்த ராணி மங்கம்மா, காவிரியை மீட்க படையுடன் கிளம்பினாள்.பயந்து போன மன்னன் உடனே காவிரியை திறந்துவிட்டான்.
இந்தியா விடுதலை அடைந்தபின் மைசூரில் அனுமந்தப்பா என்ற திவான் அணைகளை அடைத்து தமிழ் நாட்டுக்கு தண்ணீர் வராமல் தடுத்தார். அப்போது தலைவர் காமராஜர் அணைகளை உடனே திற்ந்து விடுங்கள் ! இல்லையேல் ராணுவ உதவியுடன் அணைகளை திறப்போம் என்று எச்சரித்தார்.உடனே மைசூர் அரசு அணைகளை திறந்து விட்டது.
0 கருத்துரைகள்:
Post a Comment