Wednesday, October 28, 2009

கொஞ்சம் சிந்தியுங்கள்.

அன்பு உள்ளங்களுக்கு வணக்கம்.தட்டு தடுமாறி வலைப்பூ ஆரம்பித்துவிட்டேன்.ஆனால் என்ன எழுதுவது எதைப்பற்றி எழுதுவது!குழப்பம்,தயக்கம்!இறுதியாக என்னையும்,என் எழுதுக்களையும் ஒருமுகப்படுத்தி  என் கிறுக்கல்களை ஆரம்பித்துவிட்டேன்.தவறு இருந்தால் தலையில் குட்டுங்கள்.திருத்திக் கொள்கிறேன்!பிடித்திருந்தால் முதுகில் தட்டிக்கொடுங்கள்!வளர்கிறேன். 

இன்றைய உலகில் மனிதன்(சில) தன் கல்வி தரத்தை இழந்து விட்டான்.தன் வாழ்க்கை தரத்தை துறந்து விட்டான்.தரம் கெட்ட இந்த சமுதாயத்தில் இன்னும் தரமுடன் இருப்பது மதவெறியும்,சாதி வெறியும் தான்.இயந்திரத்தை வைத்துக்கொண்டு தினமும் ஒரு நாடகம் நடத்துகின்றான்.இவர்களின் வெறியாட்டத்துக்கு எரிவது பேருந்துகளும்,கடைகளும்,பாதிக்கப்படும் அப்பாவி மக்களின் வயிறும் தான்.

சாதி மத பிரச்சினையில் நுழைந்து விட்ட மனிதனால்,தன் வாழ்க்கை பிரச்சினயில் நுழைய முடியவில்லை.இவர்கள் மதத்தை நேசிக்கும் மனிதர்கள்.சாதியை நேசிக்கும் மனிதர்கள்.நம் தாய்திரு நாட்டை நேசிக்காத மனிதர்கள்.அயல் நாடுகளோ விஞ்ஞானத்துறையில் முன்னேறிக்கொண்டிருக்க, நம் நாடோசாதி,மத பிரச்சினைகளில் முன்னேறிக்கொண்டிருக்கிறது.தினமும் கொலையும்,கொளுத்தல்கலும் பெருகிக்கொண்டிருக்கிறது.

நாம் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும்.சிலை வைப்பதும்,பெயர் சூட்டுவதும் அரசியல்வாதிகளின் வேலை.கடவுளின் பெயரால் கலகம் செய்வது ஆன்மீகவாதியின் வேலை.நாம் இதை ஒரு போதும் உணர்வதில்லை.நாம் அனைவரும் இந்தியநாட்டின் குடிமக்கள்.நமக்குள் ஏன் இந்த குலம் கானும் பேதம்.வேண்டாம்,வேண்டவே வேண்டாம்.நாம் எந்த மதத்தில் இருந்தாலும் அது நல்லதையே போதிக்கிறது.

நாம் சிறுபாண்மையினராய் இருந்தாலும் சரி,பெரும்பான்மையினராய் இருந்தாலும் சரி,மொத்தத்தில் பெருந்தன்மை உள்ளவர்களாய் இருப்போம்!இந்தியாவின் விடிவை நோக்கிக் காத்திருப்போம்!
        
                                      வாழ்க தமிழ்!வளர்க பாரதம்!

0 கருத்துரைகள்:

Search This Blog